Sunday, August 12, 2012

நீர்கொழும்பு அருள்மிகு ஸ்ரீ காமாட்சிஅம்மன் ஆலயத்தின் புதிய சித்திரத் தேர் திருவிழா

நீர்கொழும்பு அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் புதிய சித்திரத் தேர் திருவிழா 30-7-2012 அன்று மாலை 3. 30 மணிக்கு இடம்பெற்றது.

அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு வசந்த மண்டப பூசை  நடைபெற்று புதிய சித்திரத் தேரில் அம்பாள் எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்வு இடம்பெற்றது.



 

 


Saturday, August 11, 2012

நீர்கொழும்பு - தலாதீவு அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா


நீர்கொழும்பு - தலாதீவு அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா  1-8-2012 அன்று நடைபெற்றது.

அன்று காலை 8 மணிக்கு சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குட பவனி புறப்பட்டு தலாதீவு அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரிஅம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

Video – Kalanenjan Shajahan




Saturday, July 14, 2012

இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அமைப்பினரின் கண்காட்சி (காணொளிகள்)

இலங்கை அஹ்;மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அமைப்பினரினால் வருடாந்தம் நடத்தப்படும் கண்காட்சியும் விற்பனையும் 14-7-2012 மற்றும் 15-7-2012 ஆகிய தினங்களில் நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலின் அமைந்துள்ள ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.

“புனித அல்குர்ஆன்” என்ற தலைப்பின் கீழ்  இடம்பெறும் இக்கண்காட்சியில் அரபு எழுத்தணிகள் , குர்ஆன் விளக்கப் படங்கள் , சுகாதாரம் தொடர்பான விளக்கப் படங்கள், இஸ்லாமிய புத்தகங்கள், கைவினைப் பொருட்கள், என்பன காட்சிக்கு வைக்கப்பட்டன.

கண்காட்சியில் இலங்கை அஹ்;மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மதத் தலைவர்களும் முக்கியஸ்த்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.



Saturday, June 30, 2012

நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலைய அறநெறி பாடசாலை மாணவர்களது நடனம்


 சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவும் புத்தக கண்காட்சியும் 30-6-2012 அன்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் நடைபெற்றது.

நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையம் கொழும்பு இராம

Friday, June 22, 2012

நீர்கொழும்பில் மாட்டின் முகத் தோற்றத்தில் மீன்


நிர்கொழும்பு கடற்பகுதியில் மாடு ஒன்றின் முகத் தோற்றத்தை கொண்ட மீன் ஒன்று  பிடிக்கப்பட்டுள்ளது.
அதனை நீர்கொழும்பு தளுபத்தை விளையாட்டு மைதான மாவத்தையை

Saturday, June 9, 2012

விஷேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு விழா


நீர்கொழும்பு கல்வி வலயத்தின் விஷேட கல்வி அபிவிருத்திப் பிரிவுகளில் கல்வி பயிலும் விஷேட தேவையுடைய  மாணவர்களின் விளையாட்டு 8-6-2012 அன்று  துடெல்ல கிறிஸ்துராஜ வித்தியாலய மைதானத்தில் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6

Thursday, June 7, 2012

பல்கலைக்கழக பகிடிவதைகள் கொண்ட காணொளி வெளியானமை ஏற்படுத்தியுள்ள தாக்கம்


போராதனை பல்கலைக்கழக வளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பகிடிவதைகள் கொண்ட வீடியோ காட்சிகள் அண்மையில் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளில் காண்பிக்கப்பட்டன.